செய்திகள்

மாளிகாவத்தையிலிருந்து நடவடிக்கையை ஆரம்பிப்போம் : ஞானசார தேரர் எச்சரிக்கை

ஶ்ரீ லங்கா தவ் ஹித் ஜமா அத் அமைப்புக்கு எதிராக இன்றைய தினத்திற்குள் அரசாங்கம் நடவடிக்கையெடுக்காவிட்டால் மாளிகாவத்தையிலிருந்து தமது நடவடிக்கையை ஆரம்பிப்போம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்திடமும் , தற்போதைய அரசாங்கத்திடமும் அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்த போதும் இது வரை நடவடிக்கையெடுக்கப்படவில்லையெனவும் இதனால் சட்டத்தை தாமே கையிலெடுக்க வேண்டிவந்துள்ளதாகவும் இதன்படி காட்டு சட்டத்தை கையிலெடுத்து போராட்டங்களை நடத்த வேண்டிவரும். இதன்போது கம்பு தடிகள் கற்களையும் பயன்படுத்தலாம். அத்துடன் எங்களில் 100 , 200 பேரும் உயிரிழக்கலாம் அதற்கும் தயாராகவே இருக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.
பொது பல சேனாவை சேர்ந்த டான் பிரியசாத் என்ற நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே நேற்று ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு தம்பதிவவுக்கு யாத்திரை சென்றிருந்த ஞானசார தேரர் நேற்று மாலை நாடு திருமிபியிருந்த நிலையில் அவர் விமான நிலையத்தில் வைத்தும் மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் வைத்தும் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)14991841_1233573466680929_3513534472179877787_n