யாழில் இருந்து வந்த 70 கிலோ கேரளா கஞ்சா ஹயஸ் வாகனத்தில் இருந்து மீட்பு: வவுனியா பொலிசார் அதிரடி
யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கேரளா கஞ்சாவை தாம் கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஏ9 வீதி, நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகில் வைத்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் இக் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இருந்து கொழும்பு கொச்சிக்கடை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான குறித்த ஹயஸ் வாகனத்தை நொச்சி மோட்டைப் பகுதியில் மறித்து சோதனை செய்த போது அதன் இருக்கைகளில் மஜிகவும் சூட்சுமமான முறையில் 70 கிலோ கேரளா கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டது.
குறித்த வாகனத்தையும் அதில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 இளைஞர்களையும் கைது செய்துள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தார்.


N5




