செய்திகள்

”தௌஹீத் ஜமா அத் ” செயலாளர் கைது

”ஶ்ரீ லங்கா தௌஹித் ஜமா அத்” அமைப்பின் செயலாளர் அப்துல் ராசீக் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மற்றைய மதத்தை நிந்திக்கும் வகையிலும் மற்றும் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)