அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம்
இலங்கை வாழ் அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு மிகவும் உறுதிப்படுத்தக் கூடியவாறு தொகுக்கப்பட்ட 1996ம் ஆண்டின் 28ம் இலக்க அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் இது வரையில் அங்கவீனமுற்ற சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைபொன்றாக அமுல்படுத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையில் 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08ஆந் திகதி இலங்கை அங்கவீனமுறற்ற நபர்களின் உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையை அங்கீகரித்தது. இவ்வங்கீகாரத்தோடு அதன் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட 30 உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மேற் கூறப்பட்ட சட்டத்தில் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபைக்கு பதிலாக மிகவும் சுயாதீனமான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதன் மூலம் அங்கவீனமுற்ற நபர்களுக்காக மிகவும் பரந்த அளவிலான சேவையொன்றை வழங்குவதை நோக்காக கொண்டு 1996ம் ஆண்டின் 28ம் இலக்க அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி. திசாநாக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. -(3)




