மழையுடனான கால நிலை தீவிரமடையும்
நாட்டில் நாளை வெள்ளிக்கிழமைக்கு பின்னர் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை தீவிரம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில், குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
அத்துடன் மேற்கு. சப்ரகமுவ, தென் மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. -(3)




