செய்திகள்

நல்லிணக்க பாதையை குழுப்ப இனவாத சக்திகள் முயற்சி : அரசாங்கம்

அரசாங்கத்தின் நல்லிணக்க பயணத்தை சீர்குலைப்பதற்கு இனவாத, மதவாத சக்திகள் சக்திகள் சில முயற்சிப்பதாக இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை இது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர்; குறுகிய வர்த்தக நோக்கங்களை விடுத்து நாட்டின் நலன் கருதி ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளைச் சீர்குலைக்க சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன வாதம் மற்றும் மதவாத உருவில் பிரச்சினைகள் கிளப்பிவிடப்படுவதை அண்மையில் இடம்பெற்றுள்ள சில சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனை சகலரும் உணர்ந்து கொள்ள முடியும். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவையின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)