விஜய் படத்தை மறுத்த செல்வராகவன்
தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். தற்போது வரை தனுஷை தவிர இவர் எந்த முன்னணி நடிகருடனும் படம் பண்ணவில்லை.
சமீபத்தில் விஜய்யுடன் ஒரு படம் இயக்க போகிறார் என்ற செய்தி அதிகமாக பரவப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விஜய்யுடன் படத்தை செல்வாவின் தந்தையும் கூட உறுதி செய்தார். ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் படத்தை முழுவதுமாக மறுத்தார்.
விஜய்யை நட்பு ரீதியில் சந்தித்தேன் தவிர வேறு ஒன்றுமில்லை என்றார். இந்த கூட்டணியை மிகவும் எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் தான் உள்ளனர். மேலும் செல்வா அடுத்த சூர்யாவை வைத்து படம் செய்வதால் இந்த விஜய் படத்தின் செய்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
N5




