செய்திகள்

இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகளை எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் நேரில் சென்று பார்வை

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் இன்று பகல் 11.30 மணிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதன் புனரமைப்புப் பணிகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது மாகான பணிப்பாளர்  கிளிநொச்சி பிரதிநீர்ப்பாசனப்பொறியியலாளர் மற்றும் மாகாண நீரப்பாசனப்பொறியியலாளர்கள் பாரளுமன்ற உறுப்பினர்;கள்; சிவஞானம் சிறிதரன் மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கல்வி அமைச்சர் த. குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் 7000 ற்கு மேற்பட்ட விவசாயிகளின் இடைவிடாத கோரிக்கையையும் ஏற்று, 2016ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையும் இடைநிறுத்தப்பட்டு வேலைத்திட்டம் முழுமூச்சுடன் நடைபெற்று வருகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினது இலகுகடன் திட்டத்தின் கீழ் குளக்கட்டு 2 அடியால் உயர்த்தி 19 ஆஊஆ நீர் கொள்ளளவை கூட்டுவதற்கான திட்ட வரைபும் அதனுடன் இணைந்த ஏனைய கட்டுமானங்களும் வான், பாலம் அமைப்பு வேலைகளும் திருவையாறு ஏற்று நீர்ப்பாசன வேலைகளும்; சுமார் 2000 மில்லியன் பெறுமதியில் நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் ஆறு பொதிகளாக பிரிக்கப்பட்டு,; ஒப்பந்காரரிடம் வழங்கப்பட்டு துரித கதியில் நடைபெறுகின்றன.
அடுத்த ஆண்டு சிறுபோக நெற்செய்கை பாதிக்காமல், அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டு இலங்கையிலுள்ள ஏனைய குளங்களுக்கு நிகராகவும், சர்வதேச தரத்திலும் புனரமைக்கப்பட்டு கிளிநொச்சிக்கும், வடமாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும் குளமாக இரணைமடு நிமிர்ந்து நிற்கும் என்பதில் ஜயமில்லை.
குளக்கட்டு நிர்மாணத்திற்கு சமாந்தரமாக குளத்தின் கீழ் அமைந்திருக்கும் 21, 000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கின்ற பிரதான வாய்க்கால், னு வாய்க்கால், வயல் வாய்க்கால், கழிவு வாய்க்கால் மற்றும் விவசாய வீதிகள் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஐகுயுனு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2890 மில்லியன் இலகு கடனிலும், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 310 மில்லியன் நிதி உதவியுடனும் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

n10