பிணை முறி விசாரணையில் நான் தலையிட மாட்டேன் : பிரதமர்
மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் எனது பொறுப்பை செய்து விட்டேன் சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது வேறுயாருக்கு எதிராகவாவது வழக்கு தொடர வேண்டுமானால் அதனை செய்யலாம். எமது தலையீடு இதில் இருக்காதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் பொருத்தமாக இல்லாவிட்டால் தனியார் சட்டத்தரணி ஒருவரையோ சரத் என் சில்வா, மொஹான் பீரிஸ் போன்ற ஒருவரையோ முன்னிறுத்தி எதிரணி கோப் அறிக்கை தொடர்பில் விசாரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




