தேசிய அடையாள அட்டைகள் பல காட்டுப்பகுதியில் மீட்பு
அம்பலாந்தோட்டை நுகசெவன பகுதியில் காட்டுப்பகுதியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
பெகோ இயந்திரத்தை பயன்படுத்தி அந்தப் பகுதியில் மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதனை பொலிஸாரை கொண்டு மீட்டுள்ள அங்குள்ளவர்கள் அவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.
இவ்வாறாக 1050 அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவை எந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்டவை யாரால் புதைக்கப்பட்டவை என்பன தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)





