மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதில் தவறில்லை : கொழும்பில் உறுதிப்பட தெரிவித்தார் விக்னேஸ்வரன்
போராட்டத்தின் போது உயிர் நீத்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறுகள் கிடையாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் மற்றும் அவரது சகோதரர்கள் அஞ்சலி செலுத்துவது தவறு என கூற முடியாது. மக்கள் தங்களது பிள்ளைகள் உயிரிழந்ததினை நினைவுப் படுத்தி அஞ்சலி செலுத்தினால் மீண்டும் விடுதலைப்புலிகள் வந்துவிடுவார்கள் என்று சிலருக்கு பயம் உள்ளது அதுவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களை நினைவு கூறுவதில் தவறுகள் கிடையாது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




