செய்திகள்

மகிந்த சீனாவுக்கு பறந்தார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.
இன்று காலை 7.15 மணியளவில் அவர் ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மூலம் சீனா நோக்கி பயணமானதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 1ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்‌ஷ அங்கு பௌத்த விகாரைகள் சிலவற்றுக்கு செல்லவுள்ளதுடன் அந்நாட்டு அரச அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். -(3)