செய்திகள்
இனவாத செயற்பாடுகள் தொடர்பாக ஆராய அரசாங்கத்தினால் குழு அமைப்பு
நாட்டில் இனவாத செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவினர் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அரசுக்கு உடனடி அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். -(3)




