செய்திகள்

லங்கா ஈ நியூஸ் ஆசிரியருக்கு எதிராக சர்வதேச பிடியாணை

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கம்பஹா நீதிமன்றத்தினால் சர்வதேச பொலிஸாரினூடாக அவரை கைது செய்யுமாறு கோரி இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர் ஒருவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்கு முன்னர் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் அவரின் படத்தை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அந்த இணையத்தளத்தின் ஆசிரியர் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படடிருந்தன. -(3)