செய்திகள்

பஸில் – ஐ.தே.க இரகசிய பேச்சு : ஆதாரத்தை வெளியிடுவேன் என்கிறார் டிலான்

ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் முன்னாள் அமைச்சரான மகிந்தவின் சகோதர் பஸில் ராஜபக்‌ஷவுக்கும் இடையே இரகசிய பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவது தொடர்பாகவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக தகவல்களை ஒரு மாதத்திற்குள் தான் வெளியிடுவேன் எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)