செய்திகள்

போனில் மிரட்டல்! நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இடமாற்றம்

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை டிசம்பர் 27 சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு ஏதோ மிரட்டல் வர தற்போது கூட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் கூட்டம் நடிகர் சங்கம் கட்டட வளாகத்திலேயே நடத்தப்போவதா விஷால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நாங்கள் சட்டத்தை மதித்து நடத்துகிறோம். கல்லூரிக்கு மிரட்டல் வந்ததால் சங்கத்திலேயே நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்வதற்காகவே வந்தோம். என்ன இடையூறுகள் இருந்தாலும் கவலையில்லை.

கூட்டம் நல்ல முறையில் நடக்கும். சிறப்பாக நடத்துவோம். இங்கு நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சி என அவர் கூறியுள்ளார்.

N5