செய்திகள்

பழம்பெரும் புகைப்பட கலைஞர் கலைமாமணி நேஷனல் செல்லையா காலமானார்

பழம்பெரும் புகைப்பட கலைஞர் கலைமாமணி நேஷனல் செல்லையா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80. எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் முதல் இளைய தலைமுறை நடிகர்கள் வரை இவர் கேமராவில் சிக்காதவர்களே இல்லை.

சூப்பர்ஸ்டாரின் ஆஸ்தான புகைப்பட கலைஞர், கடைசியாக ‘பாட்ஷா’ படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றினார். அந்தப் படத்தில் ஒரு காட்சியிலும் (நீ நடந்தால் நடையழகு பாடலில், கான்ஸ்டபிள் வேடம்) நடிக்க வைத்திருந்தார் ரஜினி.

கிட்டத்தட்ட 1200 திரைப்படங்களில் பணியாற்றி பெருமை இவருக்கு உண்டு, உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணமடந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடந்து முடிந்தது.

N5