செய்திகள்

ரயிலுடன் கார் மோதியதில் 5 பேர் பலி : வாதுவவில் கோர சம்பவம்

பாணந்துரை வாதுவ பொதுப்பிட்டிய பகுதியில் ரயில் கடவையொன்றில் காரொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த கார் மோதியுள்ளதுடன் அந்த காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 43 ,45 , 49 , 53 மற்றும் 60 வயதுடைய வாதுவை வஸகடுவ பகுதியை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)