செய்திகள்

வட மாகாண சபைக்கு எதிரான நடவடிக்கைக்கு தயாராகும் ஹெல உறுமய

வட மாகாண சபை நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாகவும் இதனால் அந்த சபைக்கு எதிராக அரசியலமைப்பு பிரகாரம் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமெனவும் ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பௌத்த விகாரைகள் வடக்கில் நிர்மானிக்க முடியாது என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும். விகாரைகளை அமைக்க யாரிடனும் அனுமதி கேட்க வேண்டுமென்ற அவசியமில்லையெனவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பேச்சாளர் நிசாந்த வர்ணசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)