செய்திகள்

வவுனியாவில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

மாவீரர் நாளான இன்றைய தினம் வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றது. வவுனியா நகரசபை அருகிலுள்ள பொங்குதமிழ் நினைவுத்தூபி முன்றலில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.

06.05 மணிக்கு மணி எழுப்பப்பட்டு பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மாவீரர்கள் நினைவாக சுடர்களை ஏற்றினர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்இ வடமாகாண சபை உறுப்பினர்ம.தியாகராசா, பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. IMG_0345 (1) IMG_0322 IMG_0332

N5