செய்திகள்
9 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் கண்ணீர் மழையால் நனைந்தது
தமிழன விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்யத வீரமறவர்களை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ம் திகதி மாவீரர் நாளாக தமிழ் மக்கள் நினைவு கூறுகின்றனர்.
யுத்தத்தின்பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் தன்வசப்படுத்தி தமிழ்மக்களை மாவீரர் நாளை அனுஸ்டிக்கவிடமால் தடுத்துவந்தனர். தங்கள்பிள்ளைகளின் கல்லறைக்கு எப்போது விளக்கேற்றுவோம் என்ற ஏக்கத்துடன் தவித்த வந்தனர் தமிழ்மக்கள்.
1அந்த ஏக்கம் இன்று நிறைவேறியது 9 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் கண்ணீர் மழையால் நனைந்தது.
இன்று மாலை முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த 5000 அதிகமான மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர் தங்களின் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றினர்.
சரியாக இன்று மாலை 6.03 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பின்னர் 6.05பிரதான பொதுச்சுடர் ஏற்றபட்டது பொதுச்சுடரினை தமிழத்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மா.வை சேனாதிராஜா ஏற்றினார் .தொடர்ந்து சம நேரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் விளக்கேற்றனர் அப் போது மாவீரர் பாடால் ஒலிக்கபட்டது அப்போது முழங்காவில் மாவீரர் துயிலும் கண்ணீர் மழையால் நனைந்து. அப்போது முழங்காவில் மாவீரர் துயிலும் சோகமயமானது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????
n10




