நான் நடிக்கவில்லை, இங்கிருந்து போகிறேன், திரிஷா அழுகை!
நடிகை திரிஷா இன்று சினிமாவில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர். திரைபிரபலங்களின் சினிமா வாழ்க்கையிலும் சில சோக சம்பவங்கள் உண்டு.
அதே போல திரிஷா சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் நடந்த விஷயம் இது. லேசா லேசா படம் கிட்டத்தட்ட 1 வருடங்களுக்கு மேலாக ஷூட்டிங் எடுக்கப்பட்டதாம்.
இயக்குனரிடமிருந்து நடன ஆசிரியர் கலாவுக்கு போன். உடனே இவர் திரிஷாவை அழைத்து இன்றோடு ஷூட்டிங் முடியப்போகிறது.
நீ ஆடும் இந்த பாட்டு தான் கடைசி டேக். இப்படி ஆடு, அப்படி ஆடு என கலா மாஸ்டர் சொல்ல , திரிஷாவுக்கு சொல்லி கொடுத்தபடி ஆடத்தெரியவில்லையாம். பின் கோபமான மாஸ்டர் அவரை திட்ட திடீரென்று மேக்கப் ரூமுக்கு ஓடிப்போய் அழுதாராம் நடிகை.
பின் மாஸ்டர் என்ன என்று கேட்க, அதற்கு திரிஷா நான் நடிக்கவில்லை, லண்டன் போய்விடுகிறேன் என சொல்ல பின் அவரை பின்னாளில் பெரிய ஹீரோயினாக வருவாய் என நிறைய சமாதானம் செய்து ஆடவைத்தாராம் மாஸ்டர்.
அப்படி சினிமாவில் உயர்ந்தவர் தான் நடிகை திரிஷா என பெருமைபடுகிறார் அந்த மாஸ்டர்.
N5




