மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்
அரச மருத்துவர்கள் அதிகாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இன்று காலை முதல் நாடளாவிய ரீதியாக இதனை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மூலம் அரச சேவை மற்றும் இலவச சுகாதார சேவை ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தே, இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சகல சிறுவர் மருத்துவமனைகள், பெண்கள் மருத்துவமனைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கான சிகிச்சியை அளிக்கும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இயங்கும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.-(3)




