செய்திகள்

”ஆவா” சந்தேக நபர்கள் பிணையில் வெளியே வந்தனர்

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என  கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 11 சந்தேக நபர்கள் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் இவர்கள் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டபோது அவர்களை தலா 10 இலட்சம் சரிர பிணைகள் இரண்டில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்பாணத்தில் கடந்த காலங்களாக ஆவா குழுவென கூறப்பட்ட குழுவொன்றினால் வாள்வெட்டுக்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பாக இவர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)