நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் , ரயில்கள் ஓடாது
இன்று நள்ளிரவு முதல் ரயில் மற்றும் தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே தொழிற்சங்கங்களும் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களும் அறிவித்துள்ளன.
ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை தனியாருக்கு விற்கும் தீர்மானத்திற்கு எதிராக ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும் , வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கான தண்டப்பணத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிராக தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இன்று நள்ளிரவின் பின்னர் ரயில் மற்றும் தனியார் பஸ் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் அந்த போராட்டத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் இ.போ.ச பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.-(3)




