செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை தடுக்கவே முடியாது : ஜே.வி.பி

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் இனி அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தவே முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் மக்கள் மீது மேலும்மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதுடன் அதற்கு எதிராக வீதிக்கு இறங்கும் மக்கள் மீது பொலிஸாரை கொண்டு தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. எவ்வாறாயினும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். எந்த வகையிலும் மக்கள் போராட்டத்தை அரசாங்கத்திற்கு தடுக்க முடியாது எனஅவர் தெரிவித்துள்ளார். -(3)