செய்திகள்

ஆட்பதிவு திணைக்களம் நாளை திறந்திருக்கும்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆட்பதிவுத் திணைக்களம் நாளை சனிக்கிழமையும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தர மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்க கடந்த இரண்டு வாரங்களாக ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த காலப் பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் அங்கு சமூகமளித்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இதன்படி, நாளை 3ஆம் திகதி சனிக்கிழமையும் மாணவர்களின் நலன் கருதி காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, சுகுருபாயவிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)