செய்திகள்
பாராளுமன்றம் நோக்கி சென்ற மகிந்த அணியின் பேரணி மீது தாக்குதல்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரினால் கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களே இந்த பேரணியை நடத்தியுள்ளனர்.
பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது பாராளுமன்ற சந்திக்கு முன்னால் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. -(3)




