இலங்கையில் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் ஜனாதிபதி
நல்ல ஒழுக்கப் பண்பாடுடைய மனிதர்களை உருவாக்குவதற்கு ஆன்மீக தத்துவங்கள் பெரிதும் உதவுவதாகவும் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரம் இன்று இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெம்பலஇ ரத்தொளுகம மெதடிஸ்த தேவாலயத்தின் இருநூறாவது ஆண்டுநிறைவு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதைகளை அமைத்தல்இ கட்டிடங்களை அமைத்தல் போன்ற பௌதீக அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மனிதனது ஆன்மீக பண்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள்இ மக்களின் நல்லொழுக்கம் அபிவிருத்தியின் ஒரு முக்கிய அளவுகோலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதிஇ அவ்வாறு பிரச்சினைகள் இருக்குமானால் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார். -(3)




