செய்திகள்

வட மாகாண சபை அதிகார வரம்பை மீறுகிறது : விகாரைகளை அமைப்பதில் தவறில்லை என்கிறார் நீதி அமைச்சர்

பௌத்த விகாரைகள் தொடர்பாக வட மாகாண சபையினால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல என நீதி மற்றும் பௌத்த மத விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட மாகாண சபை தனது அதிகார வரப்பையும் மீறியே தீர்மானங்களை நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் சகலரும் தமது மதங்களை வழிபடும் உரிமையை கொண்டுள்ளனர். இதன்படி தமது வழிபாட்டு இடங்களை சட்டத்தின்படி அமைப்பதற்கும் உரிமையை கொண்டுள்ளனர். இந்நிலையில் வடக்கு மாகாண சபையினால் பௌத்த மத வணக்கஸ்தளங்களை அந்த பகுதியில் அமைப்பதற்கு இடமளிக்காது எதிர்ப்புகளை வெளியிடுவது எந்தவொரு அடிப்படையுமற்றது. விசேடமாக மக்களுக்கு மதங்களை பின்பற்றும் உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்த எந்த உரிமையும் கிடையாது. அந்த மாகாண சபைக்கு தமது அதிகாரம் என்னவென்றுகூட தெரியாதே இத்தனைய யோசனைகளை நிறைவேற்றுகின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)