செய்திகள்

வடக்கு மாகாண சபையில் இரங்கல்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வடக்கு மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 2 நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி உரையையும் நிகழ்த்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 67ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இதனை தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் முகமாக சபை அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உருவாக்கப்பட்டு 3 வருடங்களில் இறந்த தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட உச்ச கெளரவம் இது என கூறப்படுகின்றது.

இன்றைய சபை ஆரம்பத்திலேயே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வடமாகாண சபை சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பில் அஞ்சலிகள் செலுத்தப்பட்டு, வடமாகண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.

முதலமைச்சரின் உரை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

n10