செய்திகள்

மதுபோதையில் மீன்பிடிக்க செல்வதை தடுக்க புதிய சட்டம்

மீனவர்கள் மதுபோதையில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
கடலில் மீனவர்களின் உயிரைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடி போதையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய மீனவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)