செய்திகள்
வவுனியா மாவட்ட சுதந்திரக் கட்சிக்குள் பிளவு
வவுனியா மாவட்ட சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மாவட்ட மட்ட மத்திய செயற்குழு இரு இடங்களில் ஏட்டிக்கு போட்டியாக நடைபெற்றது.
வவுனியா மாவட்ட சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. இக் கூட்டம் இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் இரு அமைப்பாளர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தான் தலைமையில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிலும், அதேநேரம் சுதந்திரக் கட்சியின் மற்றுமோர் அமைப்பாளரான வாசல என்பவரின் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் ஓர் கூட்டமும் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரு கூட்டங்களுக்கும் பிரிந்து சென்றிருந்தனர்.

N5




