ரக்னலங்கா பாதுகாப்பு நிறுவனம் அகற்றப்படுகிறது
வரையறுக்கப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தினை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
நாட்டின் தற்போதைய சமாதான சூழ்நிலையினால் அரசுடன் இணைந்த தனியார் பாதுகாப்பு சேவையொன்றினை பெற்றுக் கொள்வதன் அவசியமின்மையினை உணர்ந்து வரையறுக்கப்பட்ட ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்திடமிருந்து தற்போது பெறப்படுகின்ற நிலப்பாதுகாப்பு தொடர்பான விடயங்களை சிவில் பாதுகாப்பு திணைக்களத்திடமும், கடல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை இலங்கை கடற்படையிடமும் ஒப்படைப்பதற்கும், சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்நிறுவனத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




