ஜெயலலிதாவின் மறைவு : லண்டனில் இடம்பெற்ற இரங்கல் கூட்டம்
தமிழகத்தின் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைந்து ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், லண்டனில் இரங்கல் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இரங்கல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.
துணைப்பிரதமர் கலாநிதி தவேந்திரராஜா( அமெரிக்கா) , அவைத்தலைவர் நாகலிங்கள் பாலசந்திரன் (பிரான்ஸ்), அமைச்சர்கள் மாணிக்கவாசகர் (ஒஸ்றேலியா), ஜோ அன்ரனி ( கன்டா) ஆகிய பிரதிநிதிகள் இந்த இரஙகல் கூட்டத்தில் பங்கெடுத்து கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக விசாரணை, சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழத்தனியரசு தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் வாக்கெடுப்பு, தமிழகத்தில் வாழும் அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை போன்ற ஈழத்தமிழ் மக்கள் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் செவ்வி ஜெயலலிதா அவர்கள் எடுத்திருந்த உறுதியான நிலைப்பாடு இந்த இரங்கல் கூட்டத்தில் முக்கிய பேசுபொருளாக அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.:-06




