தமிழ் கூட்டமைப்பை தடை செய்ய முன்னர் கம்மன்பிலவின் கட்சியை தடைசெய்ய வேண்டும் : ராஜித
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றால் அதற்கு முதல் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமயவை தடை செய்ய வேண்டும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என்றும் உதய கம்மன்பில்ல தெரிவித்திருப்பது தொடர்பாக நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியாலார்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய அதைவிடவும் இனவாதம் பேசிவருகிறது இதனால் அதற்கு முன்னதாக அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




