செய்திகள்

நெடுங்கேணி மகாவித்தியாலய ஆரம்ப பிரிவு காணி இராணுவத்தால் விடுவிப்பு

வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு காணி இராணுவத்தினரால் பாடசாலை அதிபரிடம் நேற்று முன்தினம் (06.11) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியியை தம்வசப்படுத்திய இராணுவத்தினர் கடந்த 2010 ஆண்டில் இருந்து இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலை ஒன்றினை நடத்தி வந்தனர். குறித்த காணியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கொடுத்து வந்த கோரிக்கையை அடுத்து 06 வருடங்களின் பின் நெடுங்கேணி மகாவித்தியாலய அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இப் பாடசாலை காணியில் இயங்கி வந்த இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலை தற்போது நைனாமடு இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளது.
NEDU1 (5) (1) NEDU1 (6) NEDU1 (8) nedu12 NEDU1 (1)
N5