செய்திகள்

வவுனியாவில் ஏ9 வீதியை மறித்து குழப்பம் விளைவித்த பெண்: கட்டாயப்படுத்தி வாகனத்தில் ஏற்றிச் சென்ற பொலிசார்

வவுனியா, ஏ9 வீதி தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான வீதியில் நடுவே அமர்ந்து பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண்ணை பொலிசார் தமது வாகனத்தில் ஏற்று பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த இரு பெண்களுக்கிடையில் பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து பணம்கொடுத்த பெண்ணும், பணம் வாங்கிய பெண்ணும் வீதியில் சநி;தித்த போது இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இது இருவருக்கும் இடையில் இழுபறியாக மாறிய நிலையில் பணத்தினை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் பெண் நடு வீதியில் அமர்ந்துள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில் வவுனியா பொலிஸ் பிராதான காரியாலயத்திற்கு தொலைபேசியில் அங்கு நின்றவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். இருப்பினும் நீண்ட நேரம் ஆகியம் பொலிசார் வராத நிலையில் மக்கள் அப்பெண்ணை அகற்ற முயன்ற போதும் அது வெற்றிபெறவில்லை. இதன்போது அவ்வீதி வழியாக பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீதியில் இறங்கி குறித்த பகுதி போக்குவரத்தை ஒழுங்கு செய்ததுடன் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு ஒரு மணிநேரம் கடந்த நிலையில் வந்த வவுனியா பொலிசார் பெண்ணை வீதியில் இருந்து வெளியேற்ற முயன்ற போது அவர் வீதியில் படுத்து குழப்பம் விளைவித்தார். இதனையடுத்து குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றிருந்தனர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மெற்கொண்டு வருகின்றனர்.

image image image image image image image image image image image image image imageN5