செய்திகள்

இளையராஜாவையே குழப்பிய இலங்கை கவிஞனின் பாடல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ”தயே எழுந்திடம்மா தமிழ் நாடே அழுகுதம்மா” என ஆரம்பிக்கும் பாடலொன்று இணையத்தளங்கள் மற்றும் இந்திய தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
நிறையப் பேர் இந்தப் பாடலை இளையராஜா பாடல் என்றே பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இந்திய ஊடகங்கள் பலவும் அவ்வறே செய்திகள் வெளியிட்டு வந்தன. ஆனால் அது உண்மையில் இலங்கை கவிஞர் ஒருவரால் உருவாக்கப்பட்ட பாடலாகும்.
இந்தப் பாடலை இசையமைத்துப் பாடியிருப்பவர் வர்ஷன். இவர் ஒரு வளரும் இசைக் கலைஞர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு’ படத்திற்கு இசையமைத்தவர். பாடலை எழுதியிருப்பவர் வளரும் பாடலாசிரியர் இலங்கையின் பொத்துவில் அஸ்மின். ஆகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் வெளியிடப்படும் முதல் இரங்கல் பாடல் இது. இந்த பாடல் பாடிய வர்ஷனின் குரல், அச்சு அசல் இளையராஜா குரல் போல் இருப்பதால் இளையராஜா தான் இந்த பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர். -(3)