செய்திகள்
ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய கடற்படை தளபதி
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று துறைமுக ஊழியர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடற்படை தளபதி அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர் அரை காற்சட்டையுடன் அங்கிருந்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் தாக்குதல் நடத்தியவர் கடற்படை தளபதிதான் என கடற்படை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. -(3)




