செய்திகள்
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பம்
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி இன்றைய தினத்தில் இரத்தினப்புரி பெல்மதுல்ல கல்பொத்த ஶ்ரீ பாத ரஜமகா விகாரையிலிருந்து புனித சிலைகள் சிவனொளிபாத மலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இது அவிசாவளை , எட்டியாந்தோட்டை , கிதுல்கல , கினிகத்தேன , அட்டன் , நல்லத்தண்ணி வழியாக மலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
நாளை முதல் ஆரம்பமாகும் யாத்திரை காலம் எதிர்வரும் வெசாக் போயா வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




