‘SEX’ தேடலில் இலங்கை முதலிடம்
கூகுள் தேடுதளத்தில் செக்ஸ் (Sex) என்ற வசனத்தை பயன்படுத்தி அதிகமான தேடுதல்களில் ஈடுபட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை இந்த வருடமும் முதலிடத்தை பெற்றுள்ளது.
தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தும் வரும் நிலைகளில் அதற்கு அடுத்த நிலைகளை எதியோப்பியா , பங்களாதேஷ் , இந்தியா , நேபளம் ,வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பெற்றுள்ளன.
இதேவேளை இலங்கையில் அதிகமாக குறித்த தேடுதளத்தில் குறித்த வசனத்தை தேடிய மாகாணங்களில் மேல் மாகாணம் முதலிடத்தில் இருப்பதுடன் அந்த மாகாணத்தில் ஹோமாகம , வத்தளை மற்றும் பாணந்துறை நகரங்கள் முன்னிலையில் இருப்பதாக கூகுள் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. -(3)




