செய்திகள்

சிவனொளிபாத மலை காட்டுக்குள் காணமல் போன ஐவரையும் தேடும் பணிகள் தொடர்கிறது

சிவனொளிபாத மலை வனப்பகுதிக்குள் காணமல் போன 5பேரையும் தேடி பொலிஸாரும் , இராணுவத்தினரும் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் சில வெளியான போதும் அதில் உண்மையில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களை தேடி காட்டுப்பகுதியில் தொடர்ந்தும் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன.
நேற்று மாலை முதல் இவர்கள் காணமல் போயுள்ளதுடன் இவர்களிடையே லக்ஸபான தோட்ட முகாமையாளரின் மகனும் , இரண்டு யுவதிகளும் மற்றும் வழிகாட்டியாக சென்ற தோட்ட தொழிலாளியொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)