செய்திகள்

மத போதனைகளுக்கமைய வாழ்வதனூடாக மட்டுமே நல்ல மனிதர்கள் உருவாகுவார்கள்

தேரவாத பௌத்த தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்வதற்கு அரசாங்கம் உயர்ந்தபட்சம் அர்ப்பணிப்புடன் செயற்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் கொப்பேகடுவ, நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட வழிபாட்டு கூடத்தை சாசனத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் வழிபாடுகளில் ஈடுபட்டாலும், மதபோதனைகளுக்கமைய வாழ்வதனூடாக மட்டுமே நல்ல மனிதர்கள் உருவாகுவார்களென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், மனிதர்கள் மதபோதனைகளை வாழ்க்கையில் பின்பற்றாமை காரணமாகவே சமூகம் சீரழிந்து போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மனக்கலக்கமுடைய மனிதர்கள் பௌத்த தர்மத்தினூடாக நிம்மதியடையலாம் எனவும் தற்போது மேற்குலகமும் பௌத்த தத்துவம் தொடர்பில் கூடுதலாக அக்கறை காட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். -(3)