அம்பாந்தோட்டை துறைமுகத்தில பணிகளில் ஈடுபடும் கடற்படை
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடரும் நிலையில் அந்த துறைமுகத்தில் கப்பல்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி நேற்றைய தினம் கடற்படையினர் அங்கு வந்திருந்த வாகன கப்பலொன்றுக்காக 1086 வாகனங்களை ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
துறைமுக ஊழியர்கள் தங்களை சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரி கடந்த 7ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த துறைமுகத்தில் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்தும் ஒரு வாரகாலமாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதனால் அங்கு வந்திருந்த கப்பல்களுக்கு பொருட்களை ஏற்றவோ அல்லது கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கவோ முடியாதிருந்தது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட நெருக்கடி நிலைமையை சீர் செய்யும் வகையில் கடற்படையினர் அங்கு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)




