செய்திகள்

பதுளையில் அவசரகால பாதுகாப்பு நிலையத்தை அமைக்க தீர்மானம்

அவசரகால நிலைமைகளின் போது பாதிப்புக்கு உள்ளாகின்ற நபர்களுக்காக வேண்டி தற்காலிகமாக வசிப்பதற்கு உகந்த பாதுகாப்பான கேந்திர நிலையம் ஒன்றினை பதுளையில் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவசரகால நிலைமைகளின் போது பாதிப்புக்கு உள்ளாகின்ற நபர்களுக்காக வேண்டி தற்காலிகமாக வசிப்பதற்கு உகந்த பாதுகாப்பான கேந்திர நிலையம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்காக, பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள, பலங்கொடை தோட்ட கம்பனிக்கு உரித்தான அறை ஏக்கர் காணியினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சிக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)