அக்கரப்பத்தனையில் சிறுத்தை தாக்கி ஒருவர் காயம்
அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்ட வனப்பகுதியில் சிறுத்தையின் தாக்தலுக்கு இலக்காகி 43 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தோட்டத்தில் தொழில் செய்யும் வெளிகள உத்தியோகஸ்தரான எஸ்.தியாகராஜா என்பவர் வழமைப்போல் தொழிலுக்கு சென்றுள்ளார். இவருடன் தனது வளர்ப்பு நாயும் சென்றுள்ளது வனப்பகுதியில் பதுங்கிருந்த சிறுத்தை குறித்த நபரை தாக்கியதுடன் வளர்ப்பு நாயையும் தாக்கியதாக தெரியவருகின்றது.
சம்பந்தப்பட்ட நபர் மயக்கமடைந்த நிலையில் அங்கு கிடந்துள்ளார் அப்பகுதிக்கு தொழிலுக்காக சென்ற சிலர் இவரை கண்டதுடன் இவரை அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். -(3)




