செய்திகள்

மார்ச்சில் வெளிச்சம் கிட்டுமா? ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தினை மையப்படுத்தி ஓர் கலந்தாய்வு

ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா மனித உரிமைச்சபையின் வரும் மார்ச் -2017 கூட்டத் தொடரை எவ்வாறு கையாள்வது தொடர்பிலாக கலந்தாய்வுக் கூட்டமொன்று House of Commons,பிரித்தானியப் பாராளுமன்ற தொடரில்  இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற House of Commons, மண்டபத்தில் இடம்பெற்றிருந்த இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கெடுத்து காத்திரமான கருத்துரைகளை வழங்கியிருந்ததாக நா.தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் இன அழிப்புக் கெதிரான செயற்பாடுகளுக்கான அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14-04

14-06

14-07
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசாங்கத்தின் உதவிப்பிரதமரும் கல்வித்துறை அமைச்சருமான தவேந்திரா, வெளிவிவகாரத்துறை அமைச்சர் மாணிக்கவாசகர், மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் யோகலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றியதுடன் கேள்விகளுக்கு விளக்கமளித்திருந்தனர்.

நா.தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் பாலச்சந்திரன் (FRANCE), மாவீரர் ரூ முன்னைநாள் போராளிகள் குடும்பநலன் பேணல் அமைச்சர் யோ அந்தனி, நாடுகடந்த அரசாங்கத்தின் பெருமளவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்களின் தீவிர செயற்பாட்டாளர்கள் ‘அகதிகள் உரிமைகள்’ அமைப்பின் பிரதிநிதிகள், சீக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான தகவல் நிலையத்தின் (Tamil Information Centre – TIC)  அமைப்பின் பிரதிநிதிகள், நாடுகள் அற்ற தேசம் (Nation without States) அமைப்பின் பிரதிநிதிகள், சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமைப்பின் (Victims of torture) பிரதிநிதிகள் பத்திரிகை ஆளர்கள், தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் அதிதீவிர செயற்பாட்டாளர்கள் என பெருமளவானோர் கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்தனர்.

2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு சிறப்பான கருத்துக்களையும் ஆதாரங்களையும் முன்வைப்பதற்கு இவ்வாறான கலந்துரையாடல்கள் ஏதுவாக அமையும் என பெருமளவான செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.:-06