செய்திகள்

மாகம்புர துறைமுக ஊழியர்களுக்கு இன்று பி.ப 2 மணி வரை காலக்கெடு

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் இன்றைய தினம் பி.ப 2.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் இல்லையேல் சமூகமளிக்காத ஊழியர்கள் சுயவிருப்பின் பேரில் பணியிலிருந்து விலகியிருப்பதாக கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவிக்கையில்,
அமைச்சரவை தீர்மாணத்திற்கமைவாகவே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களாவர். கடந்த சில நாட்களாக அத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக தற்பொழுது நாம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளோம். கப்பற் செயற்பாடுகளிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகாமைத்துவ கட்டிடத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சி.சி.டி.விகமராக்கள் தேசப்படுத்தப்பட்டுள்ளன. நீர் தாங்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக விடயம் யாதெனில் கப்பல்களை எதேச்சாதிகாரமான முறையில் தரித்து வைப்பதாகும். இதனை கடற்கொள்ளையாகவே சர்வதேச சமூகம் கருதுகின்றது. நாடென்ற ரீதியில் இது பாரிய நெருக்கடி நிலையாகும்.
எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நோக்குடன் அரசாங்கம் என்ற வகையில் ஒரு சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம். இதனடிப்படையில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் பணிக்கு திரும்புமாறு இதற்கான நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் நாளைய தினம் (15.12.2016) பி.ப 2.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென்று அறிவித்துள்ளது.
பணிக்கு திரும்பாத ஊழியர்களினால் ஏற்படும் வெற்றிடங்களின் பொருட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மிரிஜ்ஜவில கிராமத்திலிருந்து புதிதாக ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறான நாசகார வேலைகளில் ஈடுப்பட்ட அனைவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார். -(3)