செய்திகள்

வெளிநாடுகளுக்கு சென்று குளிரால் நடுங்கும் அரசாங்கத்தினருக்கு இங்கு வந்ததும் சூடு கொடுக்க காத்திருக்கும் ஜே.வி.பி

டிசம்பர் மாதத்தில் டுபாய் மற்றும் ஹொங்கொங் போன்ற நாடுகளுக்கு சென்று குளிரை அனுபவித்து வரும் அரசாங்கத்தினருக்கு ஜனவரி மாதம் முதல் அந்த குளிரை தனிக்க தாம் சூட்டை ஏற்படுத்தவுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டின் சொத்துக்களையும் வளங்களையும் தனியாருக்கு விற்க முயற்சிக்கின்றது. இவ்வாறாக அம்பாந்தோட்டை துறைமுகம் , கொழும்பு துறைமுகம் , கற்பிட்டியிலுள்ள தீவுகள் உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்க முயற்சிக்கப்படுகிறது. அதற்கு நாம் இடமளிக்க கூடாது. இப்போ குளிர் காலத்தில் வேண்டுமென்றால் டுபாய் , ஹொங்கொங் போன்ற நாடுகளுக்கு சென்று குளிரை அனுபவிங்கள் பின்னர் ஜனவரி முதல் அந்த குளிரை தனிக்க நாம் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தி சூட்டை ஏற்படுத்துகிறோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)